பாஜக ஆட்சியில் ஜனநாயகம் வேகமாக இறந்து வருகிறது – ஜவாஹிருல்லா

ஜவாஹிருல்லா அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளின் போது  தமிழக முதல்வர் அவர்களே களத்தில் இறங்கி செயல்பட்டார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரத்தொகை வழங்கப்படும் என முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சி சார்பாக, முதல்வரின் நிவராண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளோம்.

பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் : நாடாளுமன்றத்தில் தீக்குளிக்க திட்டம்.? டெல்லி போலீசார் அதிர்ச்சி தகவல்.!

பாஜக ஆட்சியில் இருக்கும் போதெல்லாம், பல்வேறு வகையான பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விட்டுள்ளார்கள். தற்போது நாடாளுமன்றத்திற்கு இருவர் அத்துமீறி நுழைந்துள்ளனர். பிரதமர் மோடி அவர்கள் புதிய நாடாளுமன்ற கட்டிடம் பாதுகாப்பு வசதியுடன் கட்டப்பட்டது என சொல்லி வந்தார்.

ஆனால், எந்தவிதமான பாதுகாப்பு வசதியும் புதிய நாடாளுமன்றத்தில் இல்லை என்பதற்கு இந்த சம்பவம் எடுத்துக்காட்டாகும். நாட்டு மக்களுக்கே பாதுகாப்பு தருவதற்கு பாஜக தலைமையிலான அரசு தகுதியில்லை, திறமையில்லை, திராணியில்லை என்பதற்கு இந்த சம்பவம் எடுத்துக்காட்டு.

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைவு ஏற்பட்டதை குறித்து உள்துறை அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதற்காக அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். ஆனால், ஜனநாயகம் பாஜக ஆட்சியில் வேகமாக இறந்து வருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக, 14 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.