PBKSvDC: பந்து வீச்சில் மிரட்டிய பஞ்சாப்.. 175 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி..!

PBKSvDC இன்று பஞ்சாப் , டெல்லி அணிகளுக்கு இடையே  2-வது போட்டி சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது முதல் மிட்செல் மார்ஷ் அதிரடி ஆட்டத்தை விளையாடத் தொடங்கினார்.

அதன்படி 12 பந்தில் இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரி  என மொத்தம் 20 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய வந்த டேவிட் வார்னர்  29 ரன்னில் ஹர்ஷல் படேல் ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார்.  அடுத்து ஷாய் ஹோப் மற்றும் 14 மாதங்களுக்குப் பிறகு ரிஷப் பந்த் களத்தில் இறங்கினார். இருப்பினும் நிதானமாக விளையாடி வந்த ரிஷப் பந்த் அதிக ரன்கள் எடுக்காமல் 18 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

மத்தியில் இறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 5 , ரிக்கி பூய்  3 , சுமித் குமார் 2 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். ஆனால் டெல்லி அணியில் சிறப்பாக விளையாடி ஷாய் ஹோப் 33 ரன்களும் , அபிஷேக் போரல் 32* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்.

இறுதியாக டெல்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 174 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட்டையும், ரபாடா, ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.

Recent Posts

விந்தணுக்களின் வளர்ச்சி மற்றும் கருவுறுதலுக்கு.. X குரோமோசோம் மரபணு அவசியம் – புதிய ஆய்வு!

சென்னை: ஒரு புதிய ஆய்வில், X குரோமோசோம் மரபணு விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட CSIR-Centre for Cellular…

14 mins ago

எப்பா .. இதுலாம் செஞ்சாதான் ஆர்சிபி பிளே ஆஃப் வர முடியுமா ? குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள் !

சென்னை : ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு இது வரை 3 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் 4-வது அணிக்காக பெங்களூரு அணியும், சென்னை அணியும் நாளைய நாளில்…

19 mins ago

272 சீட்… தேர்தலில் தோற்றால் பாஜகவின் பிளான் ‘பி’ என்ன.? அமித்ஷா பதில்.!

சென்னை: பாஜகவுக்கு 272 எனும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அக்கட்சியின் பிளான் பி என்ன என்ற கேள்விக்கு அமித்ஷா பதில் அளித்துள்ளார். நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கான…

24 mins ago

இன்று மும்பை லக்னோ மோதல்! கம்பேக் கொடுப்பாரா ரோஹித் சர்மா?

சென்னை : இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் 2024 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17…

43 mins ago

யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல்.! கோவை நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை: யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதித்தது கோவை நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர்…

54 mins ago

‘இதுதான் டைம் .. கரெக்ட்டா செஞ்சா உலகமே உன்ன மறக்காது’ !! சேட்டனுக்கு அட்வைஸ் கொடுத்த கம்பிர் !

சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…

1 hour ago