துருக்கி, சிரியாவில் பலி எண்ணிக்கை உயர்வு..! 41,000-ஐ எட்டியது..!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41,000-ஐ எட்டியது.

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த வாரம் 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த தொடர் நிலநடுக்கத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தால் நாட்டிலுள்ள அடுக்கு மாடி கட்டிடங்கள் எல்லாம் சரிந்து விழுந்தன, இதனால் இடிபாடுகளில் சிக்கி மக்கள் உயிரிழந்ததோடு மட்டுமல்லாமல், தங்கள் சொந்தங்கள் மற்றும் உடமைகளையும் இழந்தனர்.

turkey syria 24k

துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும், இடிபாடுகளில் இருந்து இன்று வரை அதிகமான மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41,000-ஐ கடந்துள்ளது. இன்று மட்டும் இடிபாடுகளில் சிக்கியவர்களில் 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இதில் 17 மற்றும் 21 வயதுடைய இரண்டு சகோதரர்கள், கஹ்ராமன்மாராஸ் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து மீட்கப்பட்டனர். மேலும் சிறுத்தை அச்சுடன் கூடிய துணியை தலையில் முக்காடு அணிந்திருந்த சிரியாவைச் சேர்ந்த ஆண் மற்றும் இளம் பெண் இருவரும் 200 மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டனர். இந்த இடிபாடுகளில் மேலும் பலர் உயிருடன் இருக்கக்கூடும் என்று மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment