அடடே ! இந்த பழத்தை நீங்கள் உங்களுடைய உணவில் சேர்த்து கொள்வதே இல்லையா ! கண்டிப்பா சேர்த்து கொள்ளுங்க !இது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தும் !

அன்றாடம் நாம் எவ்வளவு  உணவுகளை தேடித்தேடி எடுத்து  கொண்டாலும் நமது உடலில் போதிய அளவு சத்துக்கள் கிடைப்பது இல்லை. காரணம் நாம் உணவில் கவனம் செலுத்துவது இல்லை. வேலைக்கு நேரமாகி விட்டது என்று இருக்கும் ஏதோ ஒரு உணவை சமைத்து அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு வேலைக்கு செல்கிறோம்.

மேலும் நாம் உண்ணும் உணவில் தினமும் ஒரு பழத்தை உணவாக எடுத்து கொள்ளவது மிகவும் நல்லது.அந்த வகையில் நாம் சாப்பிடும் உணவில் கண்டிப்பாக இருக்க வேண்டிய பலம் தான் கிவி பழம்.இந்த பழத்தை  சாப்பிடுவதை பலரும் விரும்ப மாட்டார்கள்.

இந்த பழத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

இதய நோய் :

கிவி பழத்தில் இருக்கும் செரடோனின் எனும் சத்து அதிக அளவில் காணப்படுவதால் இது இதய துடிப்பை சீராக வைத்து இதயம் சம்மந்த பட்ட நோய்களை  தீர்க்கிறது. செரிமான பிரச்சனைகளையும் தீர்க்கிறது.

எடை குறையும் :

இந்த பழத்தில் அதிகஅளவு டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் இது உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பழத்தில் கலோரிகளின்  அளவும் குறைவு.

இரத்த சர்க்கரையை சீராக வைக்கும் :

கிவி பழத்தில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் இருப்பதால் கொழுப்பை குறைத்து அது இரத்த அளவை சீராக வைத்து இதயநோய் மற்றும் பல பதிப்புகளில் இருந்து தடுக்கிறது.

தூக்கமின்மை :

 

கிவி பழத்தில் இருக்கும் செரடோனின் தூக்கமின்மை பிரச்சைக்கும் அருமருந்தாக பயன்படுகிறது.  இதனை தினமும் சாப்பிட்டு வர  இரவில் ஆழ்ந்த தூக்கத்தை நமக்கு கொடுக்கும்.

புற்று நோய் :

கி பழத்தில் இருக்கும் வைட்டமின் சி சத்து ஒரு நமது உடலில் தேவையான ஆன்டி ஆக்ஸிடன்ட் கொடுக்கும். மேலும் இது  ப்ரீ -ராடிக்கல்களால் நமது உடலில் செல்கள் பாதிப்படையாமல் தடுத்து புற்று நோய் வராமல் தடுக்கிறது.

மேலும் இந்த பழத்தில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் நமது உடலில் குடல் புற்று நோய், பக்கவாதம் முதலிய நோய்கள் வராமல் தடுக்கிறது.

ஆஸ்துமா :

தினம ஒரு கிவி பழம் சாப்பிட்டு வந்தால் அது சுவாச பாதையுள்ள அனைத்து  பிரச்சனைகளையும் சரி செய்து நுரையீரலில் உண்டாகும் நோய்களை தடுக்கிறது.  ஆஸ்துமா நோயாளிகள் இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

கண்பார்வை :

தினம் ஒரு கிவி பழத்தினை சாப்பிட்டு வருவதால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நம்மை நெருங்கவே நெருங்காது. முதுமையில் கண்சம்பந்தபட்ட நோய்கள் நம்மை நெருங்காது.

 

 

 

 

Recent Posts

கல்குவாரியில் வெடி விபத்து – குவாரி நிர்வாகம் ரூ.12 லட்சம் நிவாரணம்!

Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே…

5 mins ago

502 Error.! திணறிய கூகுள்… பயனர்கள் அதிருப்தி.!

Google Down : கூகுள் தேடு பொறி, மற்றும் பிற கூகுள் சேவைகள் செயல்படவில்லை என சில பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். நாம் உபயோகிக்கும் இணையத்தில்…

35 mins ago

நிலவில் தண்ணீர் இருக்கிறது.! உறுதி செய்தது நம்ம சந்திரயான்-3.!

Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய…

39 mins ago

வாகனங்களில் ஸ்டிக்கர் கட்டுப்பாடு! முக்கிய தகவல் இதோ!

Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.  சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர்,…

1 hour ago

விருதுநகர் கல்குவாரி விபத்து – நேற்று ஒருவர் இன்று ஒருவர் கைது.!

விருதுநகர் வெடிவிபத்து தொடர்பாக கல்குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி மருந்து குடோனும் செயல்பட்டு…

1 hour ago

காங்கிரஸுக்கு சவால்.! இடஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடி ஆவேசம்.!

Election2024 : மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை மாற்ற மாட்டோம் என காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்குமா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும்…

2 hours ago