மத்திய அரசை எதிர்ப்பதில் தயக்கம் ஏன்? தவெக தலைவர் விஜய் மீது விமர்சனம்.!

TVK Vijay: மக்களுக்கு விரோதமாக இருக்கும் சிஏஏ சட்டத்தை ஏற்க முடியாது என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். 2019-ஆம் ஆண்டு CAA எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது அந்த சட்டம் அமலுக்கு வருவதாக நேற்றைய தினம் மத்திய அரசு அறிவித்தது.

READ MORE – குடியுரிமை சட்டத்திருத்த சட்டம் அமல்.! அசாமில் வலுக்கும் மாணவர்கள் போராட்டம்.!

இந்நிலையில், சிஏஏ-வை அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்தவகையில், தவெக கட்சி தலைவர் விஜய்யும் சிஏஏ-வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

READ MORE – குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) என்றால் என்ன? இச்சட்டத்திற்கு எதிர்ப்பு இருப்பது ஏன்? விரிவான தகவல்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரிவினைவாத அரசியலை முன்னிறுத்தும் சிஏஏ சட்டத்தை ஏற்க முடியாது. சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான உள்ள இந்த சட்டம் மக்களின் நலனுக்கு எதிரானது. தமிழக அரசு இந்த சட்டத்தை ஏற்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். ஆனால், அதில் ஒரு இடத்தில் கூட பாஜக அரசு என்று குறிப்பிடாமல் இருந்தது.

READ MORE – அமலுக்கு வந்த குடியுரிமை சட்டம்.! முதல்வர் ஸ்டாலின் முதல் தவெக தலைவர் விஜய் வரை கடும் எதிர்ப்பு.

இதனால், அதிருப்தி அடைந்த நெட்டிசன்கள், மத்திய பாஜக அரசை எதிர்ப்பதில் ஏன் இவ்வளவு தயக்கம் என்று சாடி வருகின்றனர். தற்பொழுது இது குறித்து விவாதம்  வலைத்தளங்களில் அந்த வகையில், சினிமா விமர்சகரான பிஸ்மி தனது எக்ஸ் தள பக்கத்தில், “பாஜக அரசை கண்டிக்க தைரியம் இல்லாத விஜய்யின் அரைவேக்காடு அரசியல். பருத்திமூட்டை கோடவ்ன்லேயே இருந்திருக்கலாம்” என விமர்சித்துள்ளார்.

மேலும் வழக்கறிஞர் ஒருவர்,  CAAவை கொண்டு வந்த மத்தியரசை பார்த்து கேட்கல, CAAவை ஆதரிச்சே அதிமுகவே பார்த்து கேட்கல, CAAவை எதிர்க்கிற திமுகவே பார்த்து நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிக்கை விடுவது வேதனையளிக்கிறது என்று விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Leave a Comment