#CricketBreaking: ஐசிசி தரவரிசை பட்டியல் – அனைத்து தரப்பு போட்டிகளிலும் முதலிடம் பிடித்த இந்தியா!

அனைத்து வகை கிரிக்கெட் தரவரிசை பட்டியலிலும் முதலிடம் பிடித்து முதல் ஆசிய அணி என்ற பெருமையை பெற்றது இந்தியா.

ஐசிசி வெளியிட்டுள்ள அனைத்து வகை கிரிக்கெட் தரவரிசை பட்டியலிலும் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. அதாவது, ஒருநாள் போட்டி, டெஸ்ட், டி20 ஆகிய போட்டிகளின் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி, இந்திய அணி ஒருநாள் போட்டியில் 114 ரேட்டிங், டி20 போட்டியில் 267, டெஸ்ட் போட்டியில் 115 ரேடிங்கியுடன் முதலிடம் பிடித்துள்ளது.

teamindia15today

ஐசிசி தரவரிசையில் ஒரே நேரத்தில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த இரண்டாவது அணி இந்திய அணி. மேலும்,  ஒரே நேரத்தில் அனைத்து வகை கிரிக்கெட் தரவரிசை பட்டியலிலும் நம்பர் 1 இடத்தைப் பிடித்த முதல் ஆசிய அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது.

rohithsharma15

அதாவது, தென்னாப்பிரிக்காவிற்கு பிறகு இந்த சாதனையை படைத்த இரண்டாவது அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது. அதுவும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் முதலிடத்தை பிடித்த முதல் ஆசிய அணியாகும்.

ashwin15

நாக்பூர் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணி ஆனது. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்தியா ஏற்கனவே நம்பர் ஒன் அணியாக இருந்தது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும், டி20 போட்டிகளில் இங்கிலாந்து 2வது இடத்திலும் உள்ளன. மேலும், ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர் தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment