இந்தியாவில் கொரோனா தாக்கம் ஜூலை மாதம் உச்சத்தைத் தொடும் – உலக சுகாதார அமைப்பு.!

இந்தியாவில் ஜூலை மாதம்தான் உச்சத்தை எட்டிய பிறகு குறையும் என உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு தூதர் டேவிட் நபாரோ தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் 50,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1980 பேர் உயிரிழந்துள்ளனர் கொரோனா  பாதிப்பில் இருந்து கிட்டத்தட்ட 17,000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா கட்டுப்படுத்தும் விதமாக வருகின்ற மே 17-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் குறித்து பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு தூதர் டேவிட் நபாரோ, இந்தியாவில் கொரோனா  பதிப்பு மே மாதத்துக்கு பின்னர் குறையும் என நிபுணர்கள் முன்பு கணித்த இருந்தன. ஆனால் இந்தியாவில் ஜூலை மாதம்தான் உச்சத்தை எட்டிய பிறகு குறையும். இந்திய  மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது பாதிப்பு குறைவாக உள்ளது.

 இந்தியாவில் மக்கள் நெருக்கமாக வாழ்வதால் அங்கு கட்டுப்படுத்துவது கடினமானது. ஆனால் அதன் பரவல் குறைந்து வருகிறது. இந்தியாவில் பொறுத்தவரை கொரோனா தாக்கம் ஜூலை மாத இறுதியில் தான் அதன் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கிறோம்.