பாஜக மீது நடவடிக்கை தேவை.! ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சச்சின் பைலட் உண்ணாவிரதம்.!

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சச்சின் பைலட் உண்ணாவிர போராட்டம் மேற்கொண்டார். 

ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. அசோக் கெலாட் முதல்வர் பொறுப்பில் இருக்கிறார்.  இவரது ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் சச்சின் பைலட் இன்று ஜெய்ப்பூரில் உண்ணாவிரம் இருந்தார்.

பாஜக ஊழல் :

சச்சின் பைலட் இந்த உண்ணாவிரம் பற்றி கூறுகையில், 2018இல் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் எங்கள் கட்சியானது, வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜ.க. அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என வாக்குறுதி அளித்தது.

சச்சின் பைலட் :

ரூ.45 ஆயிரம் கோடி மதிப்பிலான சுரங்க ஊழல் குறித்து விசாரணை நடத்தவில்லை என்றால், இந்த வருட இறுதியில் வரும் சட்டமன்ற தேராதலின் போது இதுவே ஒரு பெரிய பாதிப்பாக நமக்கு (காங்கிரஸ்) அமையும். நடவடிக்கை எடுத்தால் மட்டுமே காங்கிரஸ் சொல்வதை செய்து விடும் என நம்பிக்கை மக்கள் மனதில் தோன்றும் என சச்சின் பைலட் கூறினார்.

உண்ணாவிரதம் :

நமது அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என காங்கிரஸ் கட்சி அறிவுறுத்தி இருந்த நிலையில், ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் இன்று காலை ஜெய்ப்பூரில், ஷாஹீத் ஸ்மாரக்கில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

Leave a Comment