இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து கோட்ஸி விலகல்..!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது .

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே ஜனவரி 3 முதல் கேப்டவுனில் நடைபெறவுள்ள இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்பாக தென்னாப்பிரிக்கா அணிக்கு மற்றொரு அடி ஏற்பட்டுள்ளது. அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் காயம் காரணமாக தொடரின் அடுத்த போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வீரர் வேறு யாருமல்ல ஜெரால்ட் கோட்ஸிதான்.

காயம் காரணமாக 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி விலகினார். முன்னதாக கேப்டன் டெம்பா பவுமாவும் தொடை காயம் காரணமாக டெஸ்ட் போட்டியில் இருந்து வெளியேறினார். அவருக்குப் பதிலாக டீன் எல்கர் அணி கேப்டனாக இருப்பார் என அறிவிக்கப்பட்டது. மேலும் டெம்பா பவுமாக்கு பதிலாக ஜுபைர் ஹம்சா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி கணுக்கால் காயம் காரணமாக முதல் போட்டியில்  விளையாட முடியவில்லை இதனால் இரண்டாவது டெஸ்டில் அவர் அணிக்கு  திரும்ப வாய்ப்பு உள்ளது.