ரஷ்யாவுக்கு ஆயுதங்களை அனுப்பினால் அதன் விளைவுகளை சீனா சந்திக்க நேரிடும்: அமெரிக்கா

போருக்கு மத்தியில் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை அனுப்பினால் அதன் விளைவுகளை சீனா சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை.

நேட்டோ விவகாரம் தொடர்பாக உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை நடத்த தொடங்கியது. உக்ரைன் மீதான தாக்குதல் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், தற்போது இருநாட்டு ராணுவமும் தொடர்ந்து போரிட்டு வருகிறது.

ரஷ்யா போரிட்டு வரும் நிலையில், உக்ரைன் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் மற்றும் பொருளாதார ரீதியான உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றன.

இந்த நிலையில், உக்ரைனுடன் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய போருக்கு மத்தியில் சீனா, ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கினால், அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவின் ஆயுத விநியோகம் உக்ரைனில் ஆயிரக்கணக்கான இறப்புகளை ஏற்படுத்தும். இது உக்ரைனை அழிக்க நினைக்கும் நாடுகளின் முகாமில் சீனா இருக்கும். எனவே, ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கினால், சீன அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.