பட்டாசு ஆலை வெடி விபத்து..! பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு..!

மேற்கு வங்க பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு.

மேற்கு வங்கத்தின் மேற்கு மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. தற்பொழுது வரை 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலை இயங்கி வந்த கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து மீட்பு பணியை துவங்கினர். இதில் ஏழு பேர் உயர்ந்திருந்த நிலையில், தற்பொழுது உயிரிழப்பு 9 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, வெடி விபத்திற்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் முதற்கட்டமாக தொழிற்சாலையில் கச்சா வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டதாகவும், அது வெடித்து பட்டாசுகள் எரிவதற்கு காரணமாக இருந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். இது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த சம்பவத்தால் நாங்கள் வருத்தம் அடைந்துள்ளோம். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிஐடி விசாரிக்கும் என்று கூறினார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து மாநில அரசின் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.