அக்னிபத் திட்டத்தில் முதலில் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் குழந்தைகள் பயிற்சி பெறட்டும் – ஜோதிமணி எம்.பி

முதலாவது பாஜக ஆர்எஸ்எஸ் தலைவரின் குழந்தைகளை அக்னிபத் திட்டத்தில் சேர்த்து பயிற்சி பெறட்டும் என்று ஜோதிமணி எம்.பி ட்வீட். 

பாஜக தேசிய செயலாளர் கைலாஸ் விஜய்வர்கியா, அக்னிபாத் திட்டத்தில் சேரும் இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் முடித்தபின்பு  அவர்கள் கையில் ரூபாய் 11 லட்சம் இருக்கும். அவர்கள் நெஞ்சில் அக்கினி வீரர் என்ற பதக்கம் இருக்கும்.

ஒருவேளை பாஜக அலுவலகத்தில் நான் செக்யூரிட்டியை நியமிக்கிறேன் என்றால் அக்னிபாத் திட்டத்தில் பணியாற்றிய இராணுவ வீரர்களுக்கு நிச்சயமாக வாய்ப்பு கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார் .அதேபோல் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அக்னிபாத் பயிற்சி பெறும் வீரர்கள் ஓட்டுனர், எலக்ட்ரீசியன், முடி திருத்துதல் உள்ளிட்ட திறன் பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இளைஞர்கள் தற்போது போராடி வரும் நிலையில், அவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பாஜக தலைவர்கள் பேசி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்து ஜோதிமணி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், முதலாவது பாஜக ஆர்எஸ்எஸ் தலைவரின் குழந்தைகளை அக்னிபத் திட்டத்தில் சேர்த்து, பாஜக அலுவலக பாதுகாவலர்கள், எலக்ட்ரீஷியன்கள், டிரைவர்கள், முடிதிருத்துபவர்கள், சலவை செய்பவர்கள் போன்றவர்களின் திறமைகளுடன் பயிற்சி பெறட்டும்.

இந்த நாட்டின் சேவையில் சேர்ந்து பெருமைமிகு ராணுவ வீரர்கள் ஆக வேண்டும் என்று விரும்பும் எங்கள் பிள்ளைகளுக்கு அக்னிபத்திட்டம் தேவையில்லைஎன தெரிவித்துள்ளார்.

Leave a Comment