4 மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

தமிழக முதல்வராக பொறுப்பேற்றது முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துவது வழக்கம்.

அதேபோல், அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள், அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து கொள்வார்.  திட்டத்தின் செயல்பாடு தாமதமாக இருந்தால் அதற்கான காரணத்தையும் தெரிந்துகொண்டு அதனை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்வார்.

இந்த நிலையில், இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில்  கள ஆய்வு மேற்கொள்கிறார். இந்த நிலையில் முதல்வர் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி செங்கல்பட்டில் முதல் வருகையை முன்னிட்டு,  இன்று ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பெருமாள் கோயில், மறைமலை நகர், காட்டாங்குளத்தூர் உள்ளிட்ட பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் தலைமையில் இன்று மறைமலைநகர் அருகே ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.