நிலவில் தரையிறங்கிய போது 2.06 டன் புழுதியை கிளப்பிய சந்திரயான்-3! இஸ்ரோ தகவல்!

நிலவில் ஆக.23-ம் தேதி தரையிறங்கிய போது சந்திரயான்-3 விண்கலம் 2.06 டன் புழுதியை கிளப்பியதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 (விக்ரம் லேண்டர்) விண்கலம்  பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவின் சுற்றுவட்டப்பாதைகளில் பயணித்து ஆகஸ்ட் மாதம் 23ம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது.

இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதன்பின், நிலவில் விக்ரம் லேண்டரில் இருந்த வெளிவந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வு பயணத்தை மேற்கொண்டு பல தகவலை பூமிக்கு அனுப்பியது. ஒரு நிலவு நாள் என்பது பூமியை பொறுத்தவரையில் 14 நாட்களாகும். நிலவில் சூரிய ஒளி கிடைக்கும் 14 நாட்களும் ஆய்வு மேற்கொண்டு தனது பணியை நிறைவு செய்தது.

பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்!

இதனையடுத்து, பிரக்யான் ரோவரில் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு பாதுகாப்பாக ஸ்லீப்பர் மோடில் வைக்கப்பட்டது. மேலும், ஸ்லீப் மோடுக்கு செல்வதற்கு முன், விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் நிலவில் சேகரித்த தகவல்கள் அனைத்தும் பூமிக்கு வந்து சேர்ந்தது. தற்போதுவரை சந்திரயான் 3 லேண்டரையும், ரோவரையும் நாம்மால் மீண்டும் எழுப்ப முடியவில்லை. நிலவில் வெப்ப வேறுபாடு ஏறத்தாழ 200 டிகிரி செல்சியஸ் என கூறப்படுகிறது. ஏற்கனவே சீனா போன்ற நாடுகள் நிலவுக்கு அனுப்பிய விண்கலத்தில் இயற்கை கதிரியக்க மின்கலம் (பேட்டரி) பயன்படுத்தப்பட்டது. இதனால் தான் அவைகள் ஓராண்டு வரை செயல்படுகிறது.

ஆனால், சந்திரயான் 3 விண்கலத்தில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரில் இதை நாம் பயன்படுத்தவில்லை. எனவே விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை மீண்டும் எழுப்புவது சவாலான பணி என்று கூறப்பட்டது. இருப்பினும், சந்திரயான்-3 விண்கலம் நிலவில் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்து அனுப்பப்பட்டதோ அந்த முயற்சி 100 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது.

தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தலைமைத் தேர்தல் அதிகாரி!

சந்திரயான் 3-ஐ நிலவில் சரியான இடத்தில், துல்லியமான பகுதியில் தரையிறக்குவதே நமது இஸ்ரோ விஞ்ஞானிகளின் இலக்காக இருந்தது. அதன்படி, அது வெற்றிகரமாக நடைபெற்று சாதனை படைத்தது. பின்னர் நாம் நடத்திய ஆய்வுகள், அதில் கிடைத்த தகவல்கள் எல்லாம் நமக்கு கிடைத்த போனஸ் தான். அந்த வகையில் லேண்டரையும், ரோவரையும் எழுப்ப முடியாவிட்டால் கூட சந்திரயான் 3 திட்டம் வெற்றிதான்.

இந்த நிலையில், நிலவில் ஆக.23-ம் தேதி தரையிறங்கியபோது சந்திரயான்-3 (விக்ரம் லேண்டர்) 2.06 டன் புழுதியை கிளப்பியதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரோ தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில்,  சந்திரயான்-3 லேண்டர் மாட்யூல், சந்திரனின் ஒரு அற்புதமான ‘எஜெக்டா ஹாலோ’வை உருவாக்கியது. சந்திரயான்-3 நிலவில் கிளப்பிய 2.06 டன் புழுதி, 108.4 சதுர மீட்டர் பரப்பளவில் படிந்தது எனவும் கூறியுள்ளது.