ஈரோடு இடைத்தேர்தலில் அமமுக நிலைப்பாடு – 27-ஆம் தேதி அறிவிப்பு..!

ஜனவரி 27ஆம் தேதி மற்றொரு ஆலோசனைக் கூட்டம் நடத்திய பின்னர் அமமுக நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிடிவி  தினகரன் அவர்கள் ஆலோசனை மேற்கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே அமமுகவின் எண்ணம். அதற்கான … Read more

சென்னையில் நாளை அண்ணாமலை உண்ணாவிரதம்..!

சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்.  சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் அறநிலையத்துறையை கண்டித்து நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை மற்றும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. கோயில் நிலங்கள் சூரையாடப்படுவதாகவும், கோயில்கள் கணக்கில்லாமல் இடிக்கப்படுவதாகவும் பாஜக குற்றம்சாட்டியிருந்த நிலையில், அண்ணாமலை இந்த உண்ணாவிரதத்தை அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – தினகரன் ஆலோசனை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டிடிவி தினகரன் ஆலோசனை.  ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் குறித்து டிடிவி தினகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த சட்ட மசோதாவை முதலமைச்சர் ஒரு போதும் ஏற்று கொள்ள மாட்டார் – அமைச்சர் செந்தில் பாலாஜி

உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு ஒரு எழுச்சி வந்துள்ளது என உதயநிதி பேச்சு.  சென்னையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகள் 2ம் நாள் நேர்காணல் நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் செஸ் போட்டிகளை நடத்தி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற … Read more

202 கோடி ரூபாய் மதிப்பீட்ட்டிலான உயர்கல்வி திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.!

இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.  சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் வழங்கினார். இதில் சித்தா பிரிவில் 5 மருத்துவர்கள், ஆயுர்வேதா மருத்துவர்கள் 5 பேர், ஹோமியோபதி மருத்துவர்கள் 5 பேர் என மொத்தமாக 15 உதவி மருத்துவர்களுக்கு  முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும், உயர்கல்வி துறை சார்பில் 202 கோடி ரூபாய் … Read more

எமர்ஜென்சி கதவு திறந்த விவகாரம்.! நடந்தது என்ன.? பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்.!

விமானத்தில் அவசரகால கதவை திறந்த விவகாரத்தில் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்தினால் மட்டுமே தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கோரினர். – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்.  கடந்த இந்த டிசம்பர் 10ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்சி சென்ற இண்டிகோ விமானத்தில் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பயணித்தனர். அப்போது விமானத்தின் அவசரகால கதவை எம்பி தேஜஸ்வி சூர்யா  திறந்ததாக கூறப்பட்டு அவர் அதற்கு இண்டிகோ விமான நிறுவனத்திடம் … Read more

குடியரசு தினம் – சென்னை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு..!

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது வரும் 26-ஆம் தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்படவுள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  ஜனவரி 30ம் தேதி நள்ளிரவு வரை பாதுகாப்பு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.! அதிமுக போட்டி.! பாஜக தீவிர ஆலோசனை.!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து கடலூரில் மாநில செயற்குழு கூட்டமானது பாஜக மேவிட பொறுப்பாளர் சி.டி.ரவி தலைமையில் இன்று நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி நடக்க உள்ளது. இதனால் பிரதான கட்சிகள் முழுவீச்சில் தங்கள் தேர்தல் பணிகளை ஆரம்பித்து உள்ளன. கடந்த முறை 2021 தேர்தலில் திமுக – அதிமுக என இரு கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில … Read more

அதிமுகவில் சண்டை ஏற்படும் போது திமுக உள்ளே புகுந்து விடுவார்கள் – ராஜேந்திர பாலாஜி

தேர்தல் எப்போது வரும் என்று எதிர்பார்ப்பு தற்போது மக்களிடம் எழுந்துள்ளதாக ராஜேந்திர பாலாஜி பேச்சு.  விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்ட விழா நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் ஏழைகளுக்கான அனைத்து திட்டங்களை  நிறுத்திய பெருமைக்கு சொந்தக்காரர்கள். மேலும் மகளீருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை தருவதாக சொன்ன திமுக இதுவரை அதை … Read more

தேர்தலில் போட்டியிடவில்லை -ஜி.கே.வாசன் அதிரடி அறிவிப்பு..!

ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை என்று ஜி.கே.வாசன் அறிவிப்பு.  ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை என்றும், அதிமுக போட்டியிட உள்ளதாகவும் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.