#BREAKING: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – பேரணிக்கு தடை விதித்த தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 11ம் தேதி வரை பேரணிக்கு தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 28-ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் 11ம் தேதி வரை பேரணிக்கு தடை விதிக்க மாநில தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பேரணியாக சென்று வாக்கு சேகரிக்க பிப்ரவரி 11-ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாத யாத்திரை, சைக்கிள் பேரணி, வாகன பேரணிகளுக்கும் வரும் 11-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

உள் அரங்குகளில் கூட்டம் நடத்தும் போது சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும். கொரோனா தடுப்பூசி நடவடிக்கைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Recent Posts

சிசிடிவியை பார்த்தால் உண்மை தெரியும்… ஸ்வாதி மாலிவால் பரபரப்பு.!

சென்னை: கெஜ்ரிவால் உதவியாளரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் ஸ்வாதி மாலிவால் இதுகுறித்து டிவீட் செய்துள்ளார். கடந்த மே 13ஆம் தேதி டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவரும்,…

2 mins ago

55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…

32 mins ago

நண்பேன்டா! சந்தானத்தை வைத்து கல்லா கட்ட ஆர்யா போட்ட பலே திட்டம்?

சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…

36 mins ago

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

54 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

57 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

57 mins ago