#BREAKING : புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவரை கொண்டு திறக்க வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் மனு..!

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவரை கொண்டு திறக்க வேண்டும் என்று மனுதாக்கல். 

நாடாளுமன்ற புதிய கட்டிடம் வரும் 28-ஆம் தேதி பிரதமர் மோடி திறக்க உள்ள நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் எதிர்க்கட்சிகள் அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் இந்த நிகழ்ச்சியை புறக்கணிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவரை கொண்டு திறக்க வேண்டும் என்று ஜெய் சுகேன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுதாக்கல் செய்துள்ளார். இதனை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரிக்கவுள்ளனர்.

முன்னதாக நாடாளுமன்ற திறப்பு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிர்மலா சீதாராமன் அவர்கள், பிரதமரை பிடிக்கவில்லை என்றாலும் நாடாளுமன்றத்திற்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும். முன்பு குடியரசுத் தலைவர் விமர்சித்தவர்கள் தான் தற்போது அவரைக் கொண்டு விழாவை நடத்த வேண்டும் என்கின்றனர் என பேட்டி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.