#BREAKING: இலங்கையில் பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தம்!

இலங்கையில் எரிபொருள் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி பெட்ரோலியத்துறை நடவடிக்கை.

இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல இடங்களில் பொது சொத்துக்களை எரிக்க பெட்ரோல், டீசல் பயன்படுத்தப்படும் என்ற நிலையில், இதன் காரணமாக எரிபொருள் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி பெட்ரோலியத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த போராட்டத்தில் வன்முறைகள் வெடித்துள்ளது. இதனால், அரசியல் தலைவர்கள் வீடுகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வன்முறையால் இலங்கையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதனிடையே, இலங்கையில் போராட்டகாரர்களினால் அரசு அலுலகங்கள், வீடுகள் தீவைக்கப்பட்டு வந்த நிலையில், அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தினால் சுட்டு தள்ளுமாறு முப்படையினருக்கும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருந்தது. பல பகுதிகளில் போராட்டக்காரர்கள் தொடர்ந்து பொதுச் சொத்துகளைத் தாக்கி அழித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.