#BREAKING : உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு…!

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன்  எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்  மேற்கொண்டுள்ளார். இதற்காக கோவை விமான நிலையம் வந்த இபிஎஸ்-க்கு அதிமுக எம்எல்ஏக்கள் வரவேற்பு அளித்தனர். எடப்பாடி பழனிசாமியுடன், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அமித்ஷாவை  எடப்பாடி பழனிசாமி சந்திப்பு 

இந்த நிலையில், தற்போது, டெல்லியில் உள்ள அமித்ஷாவின் இல்லத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை  எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உடனிருந்தார். அதிமுக – பாஜக கூட்டணியில் தொடர்ந்து சலசலப்புகள் நிலவி வரும் நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது குறிப்பித்தக்கது.