#BREAKING : காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!

தலைநகர் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் தொடங்கி நடைபெற்றது ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில், தமிழகத்திற்கான காவிரி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய 38 டிஎம்சி நீரை உடனே திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆனால், தமிழ்நாடு அரசின் கோரிக்கை ஏற்கப்படாததால் கூட்டத்தில் இருந்து தமிழக அரசின் அதிகாரிகள் குழு வெளிநடப்பு செய்தது. இந்த நிலையில், தற்போது காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.