#BREAKING: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு – பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு!

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு.

சென்னை மாநகராட்சியின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் ரிப்பன் மாளிகையில் தாக்கல் செய்யப்பட்டது. 6 ஆண்டுகளுக்கு பிறகு, மேயர் பிரியா தலைமையில் வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவரான 44-ஆவது வார்டு கவுன்சிலர் சர்பஜெயாதாஸ் சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக ஏற்கனவே சோதனை முறையில் நடந்து முடிந்த நிலையில், காலை உணவு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பாலின குழுக்கள் அமைக்கப்படும் என்றும்  நேர்மையான சிந்தனைகளை உருவாக்க பள்ளிகளில் பாலின குழுக்கள் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர். மேலும், சென்னையில் 2011 கணக்கெடுப்பின்போது 66.72 லட்சமாக இருந்த மக்கள்தொகை 88 லட்சமாக உயர்ந்துள்ளது. வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவரான 44-ஆவது வார்டு கவுன்சிலர் சர்பஜெயாதாஸ் பட்ஜெட் உரையை வசித்து வருகிறார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.