#BREAKING: கோகுல்ராஜ் கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் – சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டை உலுக்கிய பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என்று மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி நாமக்கல் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட நிலையில், மீட்கப்பட்டார். இந்த வழக்கில் யுவராஜ் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு, மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

கடந்த 2019 மே 5 முதல் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக 116 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இறுதி விசாரணை பிப்.9ல் நிறைவுபெற்ற நிலையில், கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டது. இந்த நிலையில், கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கி  மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்டனை விவரம் குறித்து 8ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும், கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரில் 2 பேர் இறந்த நிலையில், 5 பேரை விடுதலை செய்து நீதிபதி சம்பத்குமார் தீர்ப்பு வழங்கியுள்ளார். மீதமுள்ள தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கி மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

தொடர் மழை…நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!

சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்…

9 mins ago

சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பலி!

சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப்…

10 mins ago

வீட்டுக்குள் செடி வளர்க்கிறீர்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும்…

46 mins ago

ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய போட்டி !! 4- வதாக பிளேஆப் முன்னேற போகும் அணி எது ?

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியை பெற்று பிளே ஆப் செல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து…

3 hours ago

IPL2024: மும்பையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த லக்னோ..!

IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

9 hours ago

லாவோஸ், கம்போடியாவில் வேலை மோசடி… வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை..!

லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…

12 hours ago