Big Billion Days: போகோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி.! இந்த வாய்ப்பை தவற விடாதீங்க.!

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் மிகப்பெரிய ஷாப்பிங் நிகழ்வான பிக் பில்லியன் டேஸ் ஆனது அக்டோபர் 8ம் தேதி தொடங்கி 4வது நாளாக நடந்து வருகிறது. அக்டோபர் 15ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த விற்பனையின் போது பல முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகள் மீது பல சலுகை மற்றும் தள்ளுபடியானது அறிவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் போகோ நிறுவனத்தின் சில ஸ்மார்ட்போன்கள் மீதும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த ஸ்மார்ட்போன் மாடல் மற்றும் அவற்றின் மீதான சலுகைகளை இப்போது பார்க்கலாம்.

போகோ எஃப் 5

போகோ எஃப் 5 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் 2 வேரியண்ட்களில் அறிமுகமானது. அதில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.34,000 என்ற விலையிலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.39,999 என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. தற்போது பிக் பில்லியன் டேஸில் 8 ஜிபி வேரியண்ட் ரூ.22,999-க்கும், 12 ஜிபி வேரியண்ட் ரூ.25,999-க்கும் தள்ளுபடி மற்றும் சலுகையில் வாங்கி கொள்ளலாம்.

இதில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் கூடிய 6.67 இன்ச் (16.94 செ.மீ) அளவுள்ள எஃப்எச்டி+ டிஸ்பிளே உள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 2 பிராசஸர் மூலம் இயங்ககூடிய இந்த போனில் முன்புறம் 64 எம்பி மெயின் கேமரா, 8 எம்பி அல்ட்ராவைட், 2 எம்பி மேக்ரோ கேமரா உள்ளது. நீந்த நேர உபயோகத்திற்காக 5000 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

போகோ எக்ஸ் 5 ப்ரோ 5ஜி

சாதாரண நாட்களில் எக்ஸ் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.25,999 என்ற விலையிலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.28,999 என்ற விலையிலும் விற்பனையாகிறது. இதனை ஃபிளிப்கார்ட்டில் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில், 6 ஜிபி வேரியண்ட் ரூ.17,999 க்கும், 8 ஜிபி வேரியண்ட் ரூ.18,999 க்கும் வாங்கி கொள்ளலாம்.

எக்ஸ் 5 ப்ரோ ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் கூடிய 6.67 இன்ச் (16.94 செ.மீ) அளவுள்ள எஃப்எச்டி+ டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர் மூலம் இயங்ககூடிய இந்த போனில், முன்புறம் 108 எம்பி மெயின் கேமரா, 8 எம்பி அல்ட்ராவைட், 2 எம்பி மேக்ரோ கேமரா உள்ளது. நீண்ட நேர உபயோகத்திற்காக 5000 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

போகோ எம்6 ப்ரோ 5ஜி

எம்6 ப்ரோ ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.14,999 என்ற விலையிலும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.16,999 என்ற விலையிலும் விற்பனையாகிறது. இதனை ஃபிளிப்கார்ட்டில் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில், 4 ஜிபி வேரியண்ட் ரூ.9,999 க்கும், 6 ஜிபி வேரியண்ட் ரூ.11,999 க்கும் வாங்கி கொள்ளலாம்.

இந்த ஸ்மார்ட்போன் 6.79 இன்ச் (17.25 செ.மீ) அளவுள்ள எஃப்எச்டி+ டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 பிராசஸர் மூலம் இயங்ககூடிய இந்த போனில், முன்புறம் 50 எம்பி மெயின் கேமரா, 2 எம்பி போர்ட்ரெய்ட் கொண்ட டூயல் ரியர் கேமரா உள்ளது. நீண்டநேர உபயோகத்திற்காக 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

போகோ எம்4 5ஜி

போகோ எம்4 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.15,999 என்ற விலையிலும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.18,999 என்ற விலையிலும் சாதாரண நாட்களில் விற்பனையாகிறது. இதனை ஃபிளிப்கார்ட்டில் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில், 4 ஜிபி வேரியண்ட் ரூ.10,999 க்கும், 6 ஜிபி வேரியண்ட் ரூ.12,999 க்கும் இப்போது வாங்கி கொள்ளலாம்.

இந்த ஸ்மார்ட்போன் 6.58 இன்ச் (16.71 செ.மீ) அளவுள்ள எஃப்எச்டி+ டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 700 பிராசஸர் மூலம் இயங்ககூடிய இந்த போனில், முன்புறம் 50 எம்பி மெயின் கேமரா, 2 எம்பி டெப்த் கொண்ட டூயல் ரியர் கேமரா உள்ளது. நீண்டநேர உபயோகத்திற்காக 5000 mAh லித்தியம் அயன் பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

போகோ சி55

போகோ சி55 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.11,999 என்ற விலையிலும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.13,999 என்ற விலையிலும் சாதாரண நாட்களில் விற்பனையாகிறது. இதனை ஃபிளிப்கார்ட்டில் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில், 4 ஜிபி வேரியண்ட் ரூ.6,999 க்கும், 6 ஜிபி வேரியண்ட் ரூ.7,799 க்கும் இப்போது வாங்கி கொள்ளலாம்.

இந்த ஸ்மார்ட்போன் 6.71 இன்ச் (17.04 செ.மீ) அளவுள்ள எஃப்எச்டி+ டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் மூலம் இயங்ககூடிய இந்த போனில், முன்புறம் 50 எம்பி டூயல் ரியர் கேமரா உள்ளது. நீண்டநேர உபயோகத்திற்காக 5000 mAh லித்தியம் அயன் பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

Recent Posts

விந்தணுக்களின் வளர்ச்சி மற்றும் கருவுறுதலுக்கு.. X குரோமோசோம் மரபணு அவசியம் – புதிய ஆய்வு!

சென்னை: ஒரு புதிய ஆய்வில், X குரோமோசோம் மரபணு விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட CSIR-Centre for Cellular…

16 mins ago

எப்பா .. இதுலாம் செஞ்சாதான் ஆர்சிபி பிளே ஆஃப் வர முடியுமா ? குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள் !

சென்னை : ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு இது வரை 3 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் 4-வது அணிக்காக பெங்களூரு அணியும், சென்னை அணியும் நாளைய நாளில்…

22 mins ago

272 சீட்… தேர்தலில் தோற்றால் பாஜகவின் பிளான் ‘பி’ என்ன.? அமித்ஷா பதில்.!

சென்னை: பாஜகவுக்கு 272 எனும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அக்கட்சியின் பிளான் பி என்ன என்ற கேள்விக்கு அமித்ஷா பதில் அளித்துள்ளார். நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கான…

27 mins ago

இன்று மும்பை லக்னோ மோதல்! கம்பேக் கொடுப்பாரா ரோஹித் சர்மா?

சென்னை : இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் 2024 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17…

45 mins ago

யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல்.! கோவை நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை: யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதித்தது கோவை நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர்…

57 mins ago

‘இதுதான் டைம் .. கரெக்ட்டா செஞ்சா உலகமே உன்ன மறக்காது’ !! சேட்டனுக்கு அட்வைஸ் கொடுத்த கம்பிர் !

சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…

1 hour ago