கடைசி போட்டியில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா..! தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து.!

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது 20 மற்றும் ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும்  3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.

முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில், நேற்று கடைசி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் இறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 145 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டை பறிகொடுத்தது. பின்னர், இறங்கிய ஆஸ்திரேலிய அணி 19.3 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை பறிகொடுத்து, 146 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனால் இங்கிலாந்து 2 -1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.