ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அசத்தல் வெற்றி ..!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 16-வது போட்டியாக இன்று ஆஸ்திரேலியா அணியும் ஜிம்பாப்வே அணியும் மோதியது. அதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது.

களமிறங்கிய அனைத்து வீரரும் ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சை சிதறிடித்தனர். அதிலும் தொடக்க வீரரான ஹாரி டிக்சன் மிக சிறப்பாக விளையாடி 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ஆஸ்திரேலியா அணி 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 296 ரன்கள் எடுத்தனர்.

அதை தொடர்ந்து 297 என்ற இலக்குடன்  களமிறங்கிய  ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவின்  பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி படு மோசமாக விளையாடி இறுதியில் 23.2 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து வெறும் 71 ரன்கள் மட்டுமே எடுத்து படு தோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலியா அணியில் ஹர்கிரத் பஜ்வா சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 225 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்றது.