ஆசிய கோப்பை 2018:பாகிஸ்தான் அணி பேட்டிங் …!இந்திய அணியில் அதிரடி மாற்றம் …!

ஆசிய கோப்பை  போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ப்ராஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

2018 ஆசிய கோப்பை போட்டி யுனைடெட் அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அனைவரின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி இன்று நடைபெறுகிறது. சாம்பியன்ஸ் ட்ராஃபிக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் மோதும் முதல் போட்டி இதுவாகும்.

இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ப்ராஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணி வீரர்கள் விவரம் :
ரோகித் சர்மா (கேப்டன் ),தவான் (துணை கேப்டன் ),ராயுடு,கேதார் ஜாதவ்,தோனி,தினேஷ் ,குல்தீப்,சாஹல்,பூம்ரா ,பாண்டியா,புவனேஸ்வர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் .இதேபோல் முதல் போட்டியில் இடம்பெற்ற சர்தால் தாகூர் ,கலீல் அஹமது ஆகியோர் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இந்திய அணி தனது பந்துவீச்சை தொடங்க உள்ளது.

இதுவரை ஆசிய கோப்பை போட்டியில் இந்த இரு அணிகளும் 12 முறை மோதியுள்ளது. அதில் இந்தியா 6 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment