சிறந்த சர்வதேச வீரருக்கான விருதை தட்டி சென்ற அஷ்வின், சுப்மான் கில் ,பும்ரா ..!

பிசிசிஐ விருதுகள் 2024 விழா ஹைதராபாத்தில் தொடங்கியது. 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக பிசிசிஐ  வீரர்களுக்கு விருதுகளை வழங்குகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக பிசிசிஐ இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. விழாவில் பங்கேற்பதற்காக இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் அனைவரும் வந்துள்ளனர். வீரர்களுடன் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் வந்துள்ளார்.

2019-20- ஆம் ஆண்டு சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான “பாலி உம்ரிகர் “விருதை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பெற்றுள்ளார்.

2020-21- ஆம் ஆண்டு சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான “பாலி உம்ரிகர் “விருதை இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அஷ்வின் பெற்றுள்ளார்.

2021-22 ஆம் ஆண்டு சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான “பாலி உம்ரிகர் “விருதை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பெற்றுள்ளார்.

2023-23 சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான “பாலி உம்ரிகர் “விருதை இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மான் கில் பெற்றுள்ளார்.

இளம் இந்திய தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2023 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி அதிக ரன் எடுத்தவருக்கான “திலீப் சர்தேசாய்” விருதை வென்றார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அவர் தனது டெஸ்ட் அறிமுகமானார்.

ஐசிசி ஒருநாள் அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா தேர்வு..!

2022-23 ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி “திலீப் சர்தேசாய்” விருதை அஷ்வின் பெற்றார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் 2019-20 சீசனில் ரஞ்சி டிராபியில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களுக்கான மாதவ்ராவ் சிந்தியா விருதை வென்றார்.

2021-22 சீசனில் ரஞ்சி டிராபியில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களுக்கான மாதவ்ராவ் சிந்தியா விருதை ஷம்ஸ் முலானி வென்றார்.

2022-23 சீசனில் ரஞ்சி டிராபியில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களுக்கான மாதவ்ராவ் சிந்தியா விருதை ஜலஜ் சக்சேனா வென்றார்.

2022-23 சீசனில் ரஞ்சி டிராபியில் அதிக ரன்கள் எடுத்தவர்களுக்கான  மாதவ்ராவ் சிந்தியா விருதை ராகுல் தலால் வென்றார்.

2021-22 சீசனில் ரஞ்சி டிராபியில் அதிக ரன்கள் எடுத்தவர்களுக்கான  மாதவ்ராவ் சிந்தியா விருதை சர்பராஸ் கான் வென்றார்.

2022-23 சீசனில் ரஞ்சி டிராபியில் அதிக ரன்கள் எடுத்தவர்களுக்கான  மாதவ்ராவ் சிந்தியா விருதை மயங்க் அகர்வால் வென்றார்.

2021-22-ஆம் ஆண்டு பிசிசிஐ உள்நாட்டுப் போட்டியில்  சிறந்த கிரிக்கெட் சங்க விருதை மத்தியப் பிரதேசம் பெற்றுள்ளது.

2022-23-ஆம் ஆண்டு பிசிசிஐ உள்நாட்டுப் போட்டியில்  சிறந்த கிரிக்கெட் சங்க விருதை சவுராஷ்டிரா பெற்றுள்ளது.