#BREAKING: அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் ..!

அன்னை தமிழில் அர்ச்சனை’ திட்டத்துக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி  வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஸ்ரீரங்கத்தை சார்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழக கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதை எதிர்த்தும்,  சமஸ்கிருத மொழில் மட்டும்தான் அர்ச்சனை செய்யவேண்டும் என தனது மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது என நீதிபதிகள் தெரிவித்தனர். குறிப்பிட்ட மொழியில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் வற்புறுத்த முடியாது. கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய எந்த தடையும் இல்லை என ஏற்கனவே தீர்ப்புகள் உள்ளன என கூறி ரங்கராஜன் நரசிம்மனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.