மௌத் ஆர்கன் வாசித்த ஆண்டாள் யானை.! மனம் உருகி கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி.!

3 நாள் தமிழக பயணமாக வந்துள்ள பிரதமர் மோடி நேற்று சென்னையில் நடைபெற்ற கேலோ இந்தியா 2024 விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இன்று தனி விமானம் மூலம் திருச்சி வந்த பிரதமர் மோடி.  திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் சுவாமி தரிசனம் செய்தார்.

பிரதமர் வருகையை ஒட்டி பிற்பகல் 2 மணி வரையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. காலை 11 மணி முதல் 12.30 மணி வரையில் ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். ரங்கநாதர் கோவிலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

திருச்சியில் சாமி தரிசனம் நிறைவு… அடுத்து ராமேஸ்வரம் புறப்பட்ட பிரதமர் மோடி!

அதன் பின்னர், கருடாழ்வார் சன்னதி , மூலவர் சன்னதி, தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, பட்டாபிராமர் சன்னதி, கோதண்டராம் சன்னதி, ராமானுஜர் சன்னதி ஆகிய இடங்களில் சாமி தரிசனம் செய்தார்.  பின்னர், தமிழறிஞர்கள் நிகழ்த்திய கம்பராமாயண நிகழ்ச்சியை பிரதமர் மோடி மனம் உருகி தியானம் செய்து கேட்டுக்கொண்டார். அதன் பிறகு ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாளிடம் ஆசி பெற்றார்.

36 ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள ஆண்டாள் யானை பிரதமர் மோடி முன் மௌத் ஆர்கன் கருவியை இசைத்து மகிழந்தது. ஆண்டாள் யானை வாசித்ததை மெய் மறந்து பிரதமர் மோடி கேட்டுக்கொண்டிருந்தார்.