இன்று கரையை கடக்கும் அம்பன் புயல்.! ஐந்து சூறாவளிக்குச் சமமானது.!

மேற்கு வங்கம் – வங்கதேசம் இடையே இன்று கரையை கடக்கவுள்ள அம்பன் புயல் 5 சூறாவளிக்கு சமமானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான அம்பன் புயல், அதிதீவிர புயலாக மாறி, 6 மணிநேரத்தில் 16 கி.மீ வேகத்தில் வடகிழக்கு திசையை நோக்கி நகர்கிறது. மேலும், இது அதே திசையில் நகர்ந்து, இன்று பிற்பகல் வங்கதேசம்-மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என்றும் என்றும் இந்த அம்பன் புயல் 5 சூறாவளிக்கு சமமானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இதற்கு முன்பாக பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் புயலை எதிர்கொள்வது குறித்து அவசர ஆலோசனை மேற்கொண்டார். அம்பன் புயல் மேற்குவங்க கடற்கரையில் இன்று பிற்பகல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மிக கடுமையான சூறாவளி புயலாக 195 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு 220 முதல் 230 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் இந்த புயலானது 1999 ஆம் ஆண்டு ஒடிசாவை தாக்கி சுமார் 10,000 பேர் வரை உயிரிழந்தனர். அதன்பிறகு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட மிக மோசமான புயலாக அம்பன் உள்ளது. 

இது குறித்து பேசிய மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மக்கள் இன்று காலை 11 மணி வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் எனவும் கூறியுள்ளார். இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் வசிக்கும் 3 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக முகாமில் இருப்பவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.