அஜித்தின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் வேதாளம். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், லெட்சுமி மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சிரஞ்சீவி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது. தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் ஆச்சார்யா. இந்த படத்தை ராம் சரண் தயாரித்து கொரட்டால சிவா இயக்குகிறார். மேலும் சிரஞ்சீவி இந்த படத்தில் இரண்டு அவதாரங்களில் நடிக்க இருக்கிறார். மேலும் இவர் மலையாளத்தில் மோகன்லால் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டான லூசிபர் படத்தின் ரீமேக்கிலும் நடிக்கவுள்ளார். தற்போது அஜித்தின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை அஜித்தின் பில்லா படத்தின் ரீமேக்கை இயக்கிய மெஹர் ரமேஷ் இயக்குவதாக கூறப்படுகிறது. இவர் கடந்த ஏழு வருடங்களாக எந்த படத்தையும் இயக்காமல் இருந்த நிலையில், பில்லா படத்தை வெற்றிகரமாக இயக்கிய காரணத்தினால் சிரஞ்சீவி அவரை அழைத்து வேதாளம் படத்தை இயக்க கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…