இந்தியா

31 மாதங்கள் கழித்து ரீ-என்ட்ரி.! சபதத்தை நிறைவேற்றிய சந்திரபாபு நாயுடு.!

ஆந்திர பிரதேசம்: கடந்த 2021, நவம்பர் 19ஆம் தேதி ஆந்திர மாநில சட்டசபையில் ஓர் விவாதத்தின் போது. ஆளுங்கட்சியாக இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சிலர், எதிர்க்கட்சி தலைவராக இருந்த சந்திரபாபு நாயுடவின் குடும்பத்தினரை பற்றி தவறாக கூறியதாக கருத்துக்கள் எழுந்தன. இதனை அடுத்து கண்ணீருடன் அப்போது சட்டசபையில் இருந்து வெளியேறினார் சந்திரபாபு நாயுடு.

சந்திரபாபு நாயுடு சட்டசபையில் இருந்து வெளியேறும் போது, இனிமேல் இந்த சட்டசபையில் நான் கலந்து கொள்ள மாட்டேன். அவ்வாறு நான் கலந்து கொண்டால், ஆந்திர மாநில  முதலமைச்சராக மாறிய பிறகு தான் சட்டசபைக்கு வருவேன் என்று சபதம் மேற்கொண்டார்.

இந்நிலையில், அண்மையில் நடந்து முடிந்த ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில், மொத்தமுள்ள 175 இடங்களில் 135 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி. மேலும், அதன் கூட்டணி கட்சிகளான ஜனசேனா 21 இடங்களையும், பாஜக 8 இடங்களையும் பெற்றன. YSR காங்கிரஸ் 11 இடங்களை மட்டுமே வென்று படுதோல்வி அடைந்தது.

கடந்த 2019 தேர்தலில் வெறும் 23 இடங்களை மட்டுமே வென்று இருந்த தெலுங்கு தேசம் கட்சி, தற்போது தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து நான்காவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் சந்திரபாபு நாயுடு. மேலும், 3வது முறையாக மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க முக்கிய பங்காற்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படியான சூழலில், 31 மாதங்களுக்கு பிறகு ஆந்திர மாநில சட்டமன்றத்திற்குள் இன்று நுழைந்த முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பலத்த வரவேற்பு அளித்தனர். இன்று ஆந்திர மாநில சட்டமன்றத்தில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் எம்எல்ஏவாக பதவி ஏற்று கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.

Recent Posts

நீதிமன்றத்தில் அரசு வேலை …37 காலியிடங்களை நிரப்ப அறிய வாய்ப்பு ..! யூஸ் பண்ணிக்கோங்க !!

TN Public Sector ஆட்சேர்ப்பு : தமிழகத்தில் சென்னை மட்டும் மதுரையில் உள்ள நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பொதுத்துறை வேலைவாய்ப்பு 2024 சார்பாக 37 சட்ட அதிகாரி காலியிடங்களை…

5 mins ago

ஆம்ஸ்ட்ராங் படுகொலை.! அவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல.! திருமா பரபரப்பு பேட்டி.!

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல என விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். பகுஜன் சமாஜ்வாடி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று…

11 mins ago

இந்தியன் 2வுக்கு முன்னாடி இந்தியன் 1 சாதாரணம் தான்! கமல்ஹாசன் பேச்சு!

இந்தியன் 2 : ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996-ஆம் ஆண்டு  வெளியான திரைப்படம் இந்தியன். முதல் பாகம் பெரிய வரவேற்பை பெற்று ஹிட் ஆகி இருக்கும்…

15 mins ago

வணங்கானை பார்க்க தயாரா? டிரைலர் தேதி அறிவித்த படக்குழு!

வணங்கான் : இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கும் 'வணங்கான்' திரைப்படம் நீண்ட நாட்களாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம்மே முடிவடைந்தாலும்,…

41 mins ago

அரசுப் பேருந்துகளில் 10% கட்டண சலுகை பெறுவது எப்படி.? வழிமுறைகள் இதோ…

சென்னை: தமிழக அரசு பேருந்துகளில் இருவழி பயண முறைகளில் 10 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படுகிறது என தமிழக போக்குவரத்துறை அறிவித்துள்ளது. தமிழக அரசு பேருந்துகளில் பயணிகளின்…

46 mins ago

என்னோட தம்பி ஹர்திக் வேதனை எனக்கு தெரியும்…க்ருனால் பாண்டியா எமோஷனல்..!!

ஹர்திக் பாண்டியா : நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் மும்பை அணியில் கேப்டனாக விளையாடிய ஹர்திக் பாண்டியா சரியாக செயல்படாத காரணத்தால் அவர் மீது எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்த…

1 hour ago