#Breaking : நடிகர் அஜித்குமாரின் தந்தை காலமானார்.!

நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியன் உடல்நல குறைவு காரணமாக காலமானர்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியன் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், இன்று உடல்நலக்குறைவு காரணமாக அஜித்தின் தந்தை சுப்ரமணியன் உயிரிழந்துவிட்டார். இவருக்கு வயது 84. இந்த உயிரிழப்பை தொடர்ந்து அவரது வீட்டின் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள அஜித்தின் வீட்டில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment