சூதாட்டம் தொடர்பாக அணுகிய நபர்! பிசிசிஐயின் ஊழல் தடுப்பு பிரிவில் புகார் அளித்த முகமது சிராஜ்!

தன்னிடம் சூதாட்டம் தொடர்பாக அணுகிய நபர் குறித்து பிசிசிஐயின் ஊழல் தடுப்பு பிரிவில் முகமது சிராஜ் புகார் அளித்ததாக தகவல்.

உள் தகவல்களை பெற தன்னை அணுகியதாக பிசிசிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் புகார் அளித்துள்ளார் என திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

முகமது சிராஜ் புகார்:

அதாவது, இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டித் தொடரின்போது, அணி பற்றிய உள் தகவல்களைப் பெறுவதற்காக தன்னை ஒருவர் அணுகியது குறித்து பிசிசிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவில் புகார் அளித்துள்ளார்.

சூதாட்டத்துக்கு அடிமை:

சூதாட்டம் தொடர்பாக அணுகிய நபர் குறித்து சிராஜ் உடனடியாக ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு இந்த விஷயத்தை தெரிவித்தார் என கூறப்படுகிறது. சிராஜை அணுகியது ஹைதராபாத்தைச் சேர்ந்த ஓட்டுநர் என்றும் இந்தியப் போட்டிகளில் பந்தயம் கட்டும் பழக்கத்துக்கு அடிமையானவர் எனவும் கூறப்படுகிறது.

கைது நடவடிக்கை:

சூதாட்டத்தில் நிறைய பணத்தை இழந்த பிறகு அவர் வாட்ஸ்அப் மூலம் சிராஜை அணுகியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், முகமது சிராஜியிடம் சூதாட்டம் தொடர்பாக அணுகிய நபர் குறித்து உடனடியாக புகார் அளித்ததை அடுத்து, ஆந்திர போலீசார் அந்த நபரை கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்பாட் பிக்சிங்:

இதற்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சாளர்களான எஸ் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜித் சண்டிலா ஆகியோர் ஸ்பாட் பிக்சிங் செய்ததாக சந்தேகத்தின் பேரில் தடை விதிக்கப்பட்டது. இதுபோன்று, கடந்த 2013-ஆம் ஆண்டு மே மாதம் சூதாட்ட தரகர்களுடன் தொடர்பில் இருந்ததற்காக முன்னாள் சிஎஸ்கே அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டார்.

பிசிசிஐ எச்சரிக்கை:

இதனைத்தொடர்ந்து, பிசிசிஐ அதன் ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறது. வீரர்கள், ஊழல் தடுப்பு பிரிவினரின் அமர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் ஊழல் சார்ந்த தகவல்களை புகாரளிக்கத் தவறினால், அதற்கும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், தன்னிடம் சூதாட்டம் தொடர்பாக அணுகிய நபர் குறித்து பிசிசிஐயின் ஊழல் தடுப்பு பிரிவில் முகமது சிராஜ் புகார் அளித்ததாக தகவல் வெளியகியுள்ளது.

Leave a Comment