“ப்ளூ ஸ்டார் படம் வெளிவரக்கூடாது” சென்சார் மீது பா.ரஞ்சித் குற்றச்சாட்டு..!

அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் நடித்து கடந்த ஜனவரி 25 ம் தேதி வெளியான திரைப்படமே ‘ப்ளூ ஸ்டார்’. இந்த படத்தை ஜெயக்குமார் இயக்கத்தில், பா.ரஞ்சித் தனது நீலம் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இந்த படம் வெளியானது முதல் நல்ல வரவேற்பை பெற்று திரையில் ஓடி கொண்டிருக்கிறது. இதனால் இந்த படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடை பெற்றது.

இந்த விழாவில் பங்கேற்று பேசிய இயக்குனரும், தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் பேசிய போது ,” முதலில் சென்சார் போர்டு குழுவினர் இந்த படத்தை பார்த்தனர்.  நீலம் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட  படம் என்றாலே சென்சாருக்கு வரும்போது , படத்தில் இதெல்லாம் இருக்கும் என உஷார் ஆகிவிடுவார்கள். இந்த படத்தை சென்சாருக்கு அனுப்பும் பொழுது  எந்த ஒரு  சிக்கலும், பிரச்சனையும்  வராதுனு தான் நினைத்தேன். ஆனால் இந்த படம் வெளிவர கூடாதனு  அங்கே கருத்துகள் எழுந்தன. எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஆஹா! STR48 பர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகிறது தெரியுமா?

இந்த படத்தை ஏன் வெளியிட கூடாது என கேட்கும் பொழுது, படம் சாதியை மையப்படுத்தி உள்ளது எனவும், மேலும் பூவை ஜெகன் மூர்த்தியார் அவர்களின் புகைப்படம் வருகிறது, அவர் ஒரு ரவுடி எனவும் கூறினார்கள். எங்களை படிக்க வைத்தவரே பூவை மூர்த்தியார் அவர்கள் தான், அவர் ஒரு பெரிய தலைவர்,  எங்கள் எல்லோரையும் படிக்க வைத்தவர் அவர், அவரை எப்படி நீங்கள் ரவுடி என கூறலாம் என கேள்வி எழுப்பினோம்.

நாங்கள் எவ்வளவு பேசியும்,  முயற்சித்தும் சென்சார் தரவே முடியாது என கூறி விட்டனர். பின்னர் ரிவைஸிங் செய்து மீண்டும் விண்ணப்பித்தோம். அதில் நிறைய மாற்றங்களைச் செய்ய சொன்னார்கள். அதன் பிறகு ஒருவழியாக சென்சார் கிடைத்தது.  ஒற்றுமையை வலியுறுத்தி, எல்லோரையும் ஒன்றாக இருக்கச் சொல்லும் ஒரு படம் வெளிவர கூடாது என சொல்லும் அளவுக்கு மாற்றுக் கருத்துடைய பலர் சென்சாரில் இருக்கிறார்கள்.

இந்த மாதிரி  சமயத்தில் தான் படம் வெளியாகி மக்களிடையே சென்று நல்ல வரவேற்ப்பையும் உள்ளது. இந்த ‘ப்ளூ ஸ்டார்’ படம்,  உங்களோடு  சண்டையிடுவது எங்களுக்கு விருப்பமில்லை, நாம் எல்லோரும் ஒன்றாக, ஒத்துமையாக இருப்போம் எனும் கருத்தை சொல்லும் படமாக தான் பினான் பார்க்கிறேன்.

இந்த படத்தின் வெற்றி பல பேருக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. அந்த நம்பிக்கை நம்மை சுற்றி உள்ள சமூகத்தில் முடிந்த அளவுக்கு மாற்றத்தை உண்டாக்கும் என எங்கள் படங்கள் மூலமாக நாங்கள் நம்புகிறோம். இறுதியாக ப்ளூ ஸ்டார் படத்தில் தன்னுடன் வேலை செய்த அத்தனை பேருக்கும் நன்றி கூறி” தனது உரையை முடித்தார்.

Leave a Comment