திமுக முக்கிய பொறுப்பில் மீண்டும் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நியமனம்.! அறிவாலயம் அறிவிப்பு .!

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே, 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதே பதவியில் நியமிக்கப்பட்டார்.

அண்மையில் திமுகவின்15வது உட்கட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து திமுக கட்சி பதவிகள் குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

அந்தவகையில், திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே, 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதே பதவியில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து, திமுக மகளிரணி செயலாளராக தூத்துக்குடி எம்.பி கனிமொழி பதவியில் இருந்தார். அவர் தற்போது திமுக துணை பொதுச்செயலாளராக மாறியதால், நாகர்கோவிலை சேர்ந்த முன்னாள் திமுக எம்பி ஹெலன் டேவிட்சன் நியமிக்கப்பட்டுள்ளார் .

அடுத்து , திமுக இளைஞரணி துணை பொது செயலாளர்களாக தூத்துக்குடி திமுக பிரமுகர் ஜோயல் உட்பட 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பல்வேறு நிர்வாகிகள் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment