ஹாக்கி அணி வீரர்களுக்கு வந்த சர்ப்ரைஸ் போன் கால்..!

ஹாக்கி அணி வீரர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக ஒரு சர்ப்ரைஸ் போன் கால் வந்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி பிரிட்டன் காலிறுதி போட்டியில் பிரிட்டன் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய ஆடவர் அணி வீழ்த்தியது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இதனையடுத்து,ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஹாக்கி அரையிறுதி தொடரில் பெல்ஜியம் அணியிடம் 5:2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோற்றதால்,வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில்,இன்று இந்தியா ஜெர்மனியை எதிர்கொண்டது.போட்டியின் இறுதியில் 5:4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது.
41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி முதல் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது. வெண்கல பதக்கம் வென்ற இந்திய அணிக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக போன் கால் செய்துள்ளார் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி.
இந்திய அணியின் கேப்டன் மன்ப்ரீத் சிங், தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட், துணை பயிற்சியாளர் பியூஸ் துபே ஆகியோரிடம் செல்போன் மூலம் அழைப்பு விடுத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதில் அவர் பேசியதாவது, உங்களுக்கும் அணியின் அனைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளீர்கள். இதனால் நம் ஒட்டு மொத்த நாடும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளது. உங்களது அயராத கடின உழைப்பிற்கு பலன் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
December 19, 2024
ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!
December 19, 2024
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024