கலைஞர் சிலை திறப்பு விழாவிற்கு சோனிய வருகை…!!அதிகாரபூர்வ தகவல் வெளியானது..!!
திமுகவின் முன்னாள் தலைவர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரான சோனியா காந்தி பங்கேற்க உள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் ,தி.மு.கவின் தலைவராக இருந்த கருணாநிதி, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நிலைக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
மறைந்த கலஞரின் உடல் சென்னையிலுள்ள மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா நினைவிடத்திற்குப் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது. திமுக தலைவராக அக்கட்சியை கட்டமைத்து வழிநடத்தி சென்றவர் கருணாநிதி அவருக்கு அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சிலை வைக்கப்படவுள்ளது. கலைஞர் கருணாநிதி சிலையோடு தி.மு.கவின் நிறுவனர் அண்ணாவின் பழைய சிலையும் புதுப்பிக்கப்பட்டு நிறுவப்படஉள்ளது.
இது மட்டுமல்லாமல் மிக பிரமாண்டமான தி.மு.க வின் கொடி கம்பம் ஒன்று அங்கு நிறுவப்பட உள்ளது. திமுகவின் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் வரும் டிசம்பர் மாதம் 16ம் தேதி நடைபெறகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க திமுக சார்பில் பல்லேறு கட்சிகளுக்கு அழைக்க விடுக்கப்பட்டது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.மு.க.ஸ்டாலின் இந்த அழைப்பை சோனியா காந்தி ஏற்றுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் ஏழைகளின் மக்கள் நல்வாழ்வுக்காகவும், சமூக நீதி மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் தனது வாழ்க்கையே அர்ப்பணித்தவர் கலைஞர் கருணாநிதி.கருணாநிதி மண்ணின் மைந்தனாகஎன்றும் நினைவில் இருப்பார்.திமுக தலைமை அலுவலகத்தில் கலைஞர் சிலை திறப்பது அவருக்கு ஆற்றும் உரிய மரியாதையாகும்.இவ்வாறு தெரிவித்த அவர் உங்கள் அழைப்பை ஏற்பது எனக்கு கிடைத்த பெருமை என தெரிவித்துள்ளார்.