ரூ.80 லட்சத்துக்கு ஏலம் போன விஞ்ஞானியின் புகைப்படம்..,

அறிவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தன்னுடைய நாக்கை நீட்டி போஸ் கொடுக்கும் அந்த பிரபல புகைப்படம் ரூ.80 லட்சத்துக்கு(1,25,000 டாலர்கள்) ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. நவீன கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்ட புகழ்பெற்ற அறிவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், 1951-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி இரவு நண்பர்களும் உடன் தன்னுடைய 72வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இரவு முழுவதும் நடைபெற்ற அந்த கொண்டாட்ட நிகழ்வில் புகைப்பட கலைஞர்கள் தொடர்ந்து பல புகைப்படங்களை எடுத்துள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடிவடைந்த நிலையில் நண்பர்களுடன் ஐன்ஸ்டீன் காரில் புறப்பட்டார். 

அப்போது அங்கிருந்த ஆர்ட் சஸ்ஸீ எனும் புகைப்படக்கலைஞர் ஐன்ஸ்டீனை நோக்கி, இறுதியாக ஒரே ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்கிறேன் சிரித்த மாதிரி போஸ் கொடுங்கள், என கேட்டுள்ளார். மிகவும் சோர்வாக இருந்த ஐன்ஸ்டீன், அவரை கிண்டல் செய்யும் வகையில் நாக்கை வெளியே நீட்டி போஸ் கொடுக்க அதை அப்படியே புகைப்படமாக பதிவு செய்தார் ஆர்ட் சஸ்ஸீ. பின்னர் அந்த புகைப்படம் தனக்கு மிகவும் பிடித்துப்போக, அதன் 9 பிரிண்டுகளை கேட்டு வாங்கிக்கொண்டார் ஐன்ஸ்டீன். அதில் ஐன்ஸ்டீனால்  ”A. Einstein .51” என கையெழுத்து இடப்பட்ட ஒரு புகைப்படத்தை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த ஒருவர் 80 லட்சம் ரூபாய்க்கு தற்போது ஏலம் எடுத்துள்ளார்.

Leave a Comment