உலகின் மிக நீளமான நடை மேம்பாலம் திறப்பு…,

 யோரப் என்றழைக்கப்படும் இந்த பாலம், 278 அடி உயரத்தில், 1,620 அடி நீளம் மற்றும் 2 அடி அகலத்தில் கட்டப்பட்டுள்ளது. மத்திய ஐரோப்பிய நாடான, சுவிட்சர்லாந்தின் விஸ்ப் மாவட்டத்தில் உள்ள, ராண்டாவின் ஜெர்மேட் மற்றும் கிரேசேன் என்ற இரு மலைகளை இணைக்கும் வகையில், இந்த பாலம் கட்டப்பட்டு உள்ளது. 

தரையில் இருந்து சுமார் 85 மீட்டர் உயரத்தில் அமைக்‍கப்பட்டுள்ள இந்த பாலம், கடினமான அதிர்வுகளைத் தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. பாதசாரிகள் நடக்கும் போது, பாலம் ஆடாமல் இருக்க, 8 டன் கேபிள்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. நடைபயணம் செல்ல விரும்புபவர்களுக்கும், ஆல்ப்ஸ் மலைத்தொடரின் அழகை ரசிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கும், மலையேறுபவர்களுக்கும் இந்த பாலம், சிறந்த பொழுதுபோக்காக அமையும்.

author avatar
Castro Murugan

Leave a Comment