கத்தாரில் 8 முன்னாள் இந்திய கடற்படைஅதிகாரிகளுக்கு தூக்குத்தண்டனை..! கண்டனம் தெரிவிக்கும் இந்திய அரசியல் தலைவர்கள்..!

கத்தாரில் உள்ள ‘தஹ்ராகுளோபல் டெக்னாலஜிஸ் அண்ட் கன்சல்டென்சி சர்வீசஸ்’ என்ற நிறுவனத்தில், இந்திய கடற்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 8 அதிகாரிகள் பணிபுரிந்து வந்தனர்.

இந்த  நிலையில், கடந்த வருடம், கத்தார் அரசு இந்திய கடற்படையில் உயர்பொறுப்பு வகித்து ஓய்வு பெற்ற 8 முன்னாள் அதிகாரிகளை இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில், கைது செய்து சிறையில் அடைத்தது. இதனையடுத்து, இந்த 8 அதிகாரிகளுக்கும் கத்தார் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தெரு நாய்க்கு நெதர்லாந்து பெண் செய்த செயல்…நெகிழ்ந்த போன இந்தியர்கள்!

அதன்படி, முன்னாள் கேப்டன்களான நவ்ஜீத் சிங் கில், பிரேந்திர குமார் வர்மா, சவுரப் வசிஸ்த் ஆகியோருக்கும் முன்னாள் கமாண்டர்களான அமித் நாக்பால், புர்னெது திவாரி, சுகுனாகர் பாகலா, சஞ்சீவ் குப்தா ஆகியோருக்கும் ராகேஷ் என்பவருக்கும் மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்இந்த தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாகவும், தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை  தொடர்பு கொண்டுள்ளதாகவும், தண்டனை விதிக்கப்பட்டவர்களை மீட்பது தொடர்பாக சட்டப்பூர்வமாக ஆராய்ந்து வருவதாகவும்  தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி அவர்கள்  கூறுகையில், இஸ்லாமிய நாடுகள் தன்னை எவ்வளவு நேசிக்கின்றன என்று பிரதமர் மோடி பெருமிதம் கொள்கிறார். கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளை பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் அழைத்து வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் இதுகுறித்து, கத்தாரில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மரண தண்டனையை எதிர்கொள்வது கவலைக்குரிய விஷயம். அவர்களைக் காப்பாற்ற மத்திய அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

காங்கிரஸ் எம்பி சசி தரூர் அவர்கள், முழு வழக்கின் விவரங்களும் மர்மம் மற்றும் தெளிவின்மையால் மறைக்கப்பட்டுள்ளன. கத்தாரில் இருந்து அவர்களை அழைத்து வர உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மீது அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.