தெரு நாய்க்கு நெதர்லாந்து பெண் செய்த செயல்…நெகிழ்ந்த போன இந்தியர்கள்!

தெரு நாய்க்கு நெதர்லாந்து பெண் செய்த செயல்…நெகிழ்ந்த போன இந்தியர்கள்!

Street Dog

இந்தியாவை ஜெயா என்ற தெரு நாய் நெதர்லாந்தை சேர்ந்த தனது புதிய உரிமையாளருடன் முறையான விசா மற்றும் பாஸ்போர்ட்டுடன் இந்தியாவை விட்டு வெளியேற உள்ளது.

ஆம், உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் சுற்றித்திரிந்த தெரு நாயை தத்தெடுத்து அதற்கு முறையான பாஸ்போர்ட் விசா எடுத்து, நெதர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடன் அழைத்துச் செல்லும் நெகிழ்ச்சி சம்பவம் இந்தியர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

நெதர்லாந்து நாட்டின் தலைநகரமான ஆம்ஸ்டர்டாம் சேர்ந்த மெரல் பொன்டென்பெல் என்ற வெளிநாட்டு பெண்மணி, சுற்றுலாவுக்காக இந்தியா வந்துள்ளார். இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியை சுற்றி பார்க்க ஆசைப்பட்ட அவர், அங்கு சும்மா சுற்றிக்கொண்டிருந்தபோது திடீரென அந்த தெரு நாய் இவர்களது கண் முன் வந்துள்ளது.

செல்லப்பிராணிகள் தீரா அன்பு கொண்ட மெரல் பொன்டென்பெல், ஜெயா என்ற தெரு நாயை விரும்ப தொண்டங்கியுள்ளார். பின்னர், அவர்கள் அந்த இடத்தை விடு செல்லவும் ஜெயா பின் தொடர்ந்து சென்றுள்ளது. சிறுது தூரம் செல்ல சில தெரு நாய்கள் ஜெயாவை தொரத்தி கடிக்க முன்வந்துள்ளது, உடனே அருகில் இருந்தவர் தடுத்துள்ளார்.

இதனையடுத்து, துன்னுடன் அழைத்து செல்ல முடிவு செய்து, தனது நாட்டுக்கு செல்ல முயன்ற போது, அதற்கு பாஸ்போர்ட் மற்றும் விசா தேவைப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெயாவுக்கு பாஸ்போர்ட் மற்றும் விசாவை ஏற்பாடு செய்ய இந்தியாவில் மேலும் ஆறு மாதங்களுக்கு தங்கியிருக்க வேண்டியதாயிற்று என்று ஜெயாவை தத்தெடுத்த கதையை பொன்டென்பெ ANI செய்தியிடம் பேட்டியளித்துள்ளார்.

இவர் இவ்வாறு கூறியதும், ஒரு தெரு நாய்க்காக 6 மாதம் வரை கூடுதலாக தங்கி அதற்கு முறையான பாஸ்போர்ட் மற்றும் விசாவை பெற்று இந்தியாவிலிருந்து நெதர்லாந்துக்கு அழைத்து சென்ற நெகிழிச்சி செயல் இந்தியார்களை வியக்க வைத்துள்ளது.

Join our channel google news Youtube