உச்சம் தொட்ட இந்தியாவின் GDP வளர்ச்சி! மூன்றாம் காலாண்டில் 8.4 சதவீதம்

GDP: இந்தியாவின் GDP வளர்ச்சியானது மூன்றாம் காலாண்டில் 8.4% ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி தற்போதைய GDP வளர்ச்சியானது எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. GDP (gross domestic product) என்பது குறிப்பிட்ட நிலப்பரப்பில் அல்லது நாட்டில் குறிப்பிட்ட கால இடைவெளியில் கணக்கிடப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகும்.

Read More – உரங்களுக்கு ரூ.24,420 கோடி மானியம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இதன் மூலம் ஒரு நாட்டின் பொருளாதாரம் கணக்கிடப்படுகிறது. அந்த நாட்டின் பொருளாதாரம் குறிப்பிட்ட காலகட்டத்தில் அதிகரித்துள்ளதா அல்லது குறைந்துள்ளதா என்பதைக் கண்டறிய இது உதவுகிறது. அதன்படி இந்தியப் பொருளாதாரம் மூன்றாம் காலாண்டில் 8.4 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது, இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 4.3 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது அதிக வளர்ச்சியை அடைந்துள்ளது.

Read More – ஷேக் ஷாஜகானை 6 ஆண்டுகள் நீக்கி திரிணாமுல் காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை..!

ஆய்வாளர்கள் GDP வளர்ச்சி 7%க்கும் குறைவாக இருக்கும் என்று கணித்திருந்த நிலையில் அது 8.4 சதவீதம் என்ற பெரும் வளர்ச்சியை கண்டுள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. கட்டுமானத் துறையின் இரட்டை இலக்க வளர்ச்சி விகிதம் (10.7 சதவீதம்), அதைத் தொடர்ந்து உற்பத்தித் துறையின் நல்ல வளர்ச்சி விகிதம் (8.5 சதவீதம்) ஆகியவரை GDP வளர்ச்சியை உயர்த்தியுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் GDP வளர்ச்சி 8.4 சதவீதமாக இருப்பதற்கு இந்தத் துறைகளின் வளர்ச்சியும் முக்கியக் காரணங்களாகக் கூறப்பட்டுள்ளன.

Leave a Comment