திரிபுரா சட்டமன்ற தேர்தல்.! இதுவரை 69.60 சதவீதம் வாக்குப்பதிவு நிறைவு.!

திரிபுரா சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவில், காலை 7 மணிக்கு ஆரம்பித்த வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணி நிலவரம் வரையில் 69.60% வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் இன்று அங்குள்ள 60 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இங்கு ஆளும் பாஜக பழங்குடியின மக்கள் முன்னணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. கடந்த முறை 36 இடஙக்ளை கைப்பற்றிய பாஜக இம்முறை அதிக இடஙக்ளை கைப்பற்றும் என அம்மாநில முதல்வர் காலையில் வாக்குப்பதிவு செலுத்திவிட்டு நம்பிக்கையுடன் கூறினார்.

கூட்டணி : எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் இம்முறை பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. திரிபுரா (ஐபிஎஃப்டி) மற்றும் திப்ரா மோதா ஆகிய கட்சிகளும் மாநில கட்சி அளவில் பிரதான நம்பிக்கை பெறுகின்றன.

வாக்குப்பதிவு : காலை 7 மணிக்கு ஆரம்பித்த வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணி நிலாவரம் வரையில் 69.60% வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவு  இன்னும் கொஞ்ச நேரங்களே மீதும் உள்ள நிலையில் பலரும் தங்கள் வாக்குகளை ஆர்வமாக செலுத்தி வருகின்றனர்.

Leave a Comment