இஸ்ரேல் தாக்குதலில் 50 பணயக் கைதிகள் உயிரிழப்பு – ஹமாஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

காசா பகுதியில் இதுவரை இஸ்ரேலிய நடத்திய வான்வழித் தாக்குதலில், தாங்கள் பிடித்து வைத்திருந்த கிட்டத்தட்ட 50 பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஹமாஸ் அமைப்பு , இஸ்ரேல் மீது போர் தொடுத்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து 20 நாட்களாக பதில் தாக்குதலை ஓயாமல் நடத்தி வருகிறது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ராணுவ உதவிகளை செய்து வருகிறது. அதே போல, ஹமாஸ் அமைப்புக்கு மறைமுக ஆதரவை ஈரான் அளித்து வருகிறது. இந்த நிலையில், வான்வழி தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல் நேற்றைய தினம் தரைவழி தாக்குதலை தொடங்கியது.

சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங் காலமானார்!

தற்போது, காசா பகுதியில் ஹமாஸ் பிடியில் வைக்கப்பட்டிருந்த 50 பணயக்கைதிகள் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கூறியுள்ளது. ஹமாஸின் ராணுவப் பிரிவான அல்-காஸம் படையின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபெய்தா தான் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். குறைந்தது 224 பேரை பணயக்கைதிகளாக ஹமாஸ் பிடித்து வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருந்தலும், இந்த அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

ரஷ்யாவில் ஆட்சி கவிழ்ப்பு..விளாடிமிர் புதின் இறந்துவிட்டாரா.? கிரெம்ளின் மாளிகை விளக்கம்.!

இதற்கிடையில், ஹமாஸ்-இஸ்ரேல் இடையேயான போரில் காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,000-ஐ கடந்ததாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 15,000-க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர், இதில் 2,055 குழந்தைகள் மற்றும் 1,119 பெண்கள் அடங்குவர்.