Wednesday, November 29, 2023
Homeசினிமாதலைவர் 171 படத்தை நீ தான் பண்ணனும்! ரஜினிக்காக ஒளிப்பதிவாளரிடம் கெஞ்சிய விஜய்!

தலைவர் 171 படத்தை நீ தான் பண்ணனும்! ரஜினிக்காக ஒளிப்பதிவாளரிடம் கெஞ்சிய விஜய்!

விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் முதல் 1 வாரத்தில் உலகம் முழுவதும் 461 கோடி வசூல் செய்து தமிழ் சினிமாவில் வெளியான 1 வாரத்தில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்பு ஆகஸ்ட் மாதம் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 1 வாரத்தில் 371 கோடி தான் வசூல் செய்திருந்தது. இதனை வைத்து விஜய் தான் இப்போது பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பது போல கூறி வருகிறாரக்கள்.

அதற்கு ரஜினி ரசிகர்களும் மொத்தமாக ஜெயிலர் வசூலை லியோ முதலில் முறியடிக்கட்டும் என்பது போல மாறி மாறி சண்டைபோட்டு கொண்டு வருகிறார்கள். ஆனால், இதற்கு முன்னதாகவும் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு இரண்டு ரசிகர்களுக்கு இடையே சமூக வலைத்தளங்களில் சண்டை நடைபெற்று கொண்டு இருந்தது. ஆனால், இந்த இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் சண்டைபோட்டு கொண்டாலும் அவர்கள் எப்போதும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள்.

ஓவர் ஹைப் ஏத்தாதீங்க! வெங்கட் பிரபுவுக்கு கண்டிஷன் போட்ட நடிகர் விஜய்?

குறிப்பாக ரஜினி படங்களை பற்றி மற்றவர்களிடம் விஜய் கேட்டு தெரிந்துகொள்வது அதைப்போல விஜய் நடிக்கும் படங்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்துகளை தெரிவிப்பது என ஒற்றுமையாக இருக்கிறார்கள். இந்த நிலையில், லியோ படத்தின் படப்பிடிப்பின் போது ரஜினியின் 171-வது படத்தின் மீது மிகவும் அக்கறை கொண்டு ஒளிப்பதிவாளர் பரமஹம்சாவிடம் நீங்க தான் தலைவர் 171 படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

லியோ படத்தின் படப்பிடிப்பின் போதே லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 படத்தின் கதையை விஜயிடம் கூறிவிட்டார். லியோ படத்தின் ஒளிப்பதிவாளராக பரமஹம்சா தான் பணியாற்றினார். எனவே தலைவர் 171 படத்தின் கதையை கேட்டு மிரண்டு போன விஜய் பரமஹம்சாவிடம் நீ தான் அந்த படத்திற்கு சரியாக இருப்பாய். படத்தில் vfx காட்சிகள் எல்லாம் மிகவும் நன்றாக இருக்கும். கதையும் சரியான கதை நீ ஒளிப்பதிவு செய்தால் கண்டிப்பாக நன்றாக இருக்கும் என கூறிவிட்டாராம்.

பரமஹம்சா மிகவும் பிஸியான ஒளிப்பதிவாளர் என்பதால் அவர் தெலுங்கு படங்களில் பணியாற்ற சென்றுவிட கூடாது என்ற காரணத்தால் முன்பே தலைவர் 171 படத்தை நீ தான் பண்ணி கொடுக்கவேண்டும் என்று கூறினாராம். அந்த அளவிற்கு ரஜினி மீது மிகவும் மரியாதையை மற்றும் அன்பு விஜய் வைத்து இருக்கிறாராம். இந்த தகவலை பரமஹம்சாவே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். விஜய் ரசிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு இடையே சமூக வலைத்தளங்களில் வாக்கு வாதம் நடைபெற்று வரும் நிலையில்,  பரமஹம்சா பேசியது வாக்குவாதத்தை சற்று குறைக்க உதவியுள்ளது.