3000 புதிய பேருந்துகள் – அமைச்சர் தங்கம் தென்னரசு…!

தமிழ்நாடு சட்டப்பேரவை முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 13 மற்றும் 14-ம் தேதிகளில் விவாதம் நடைபெற்றது.

கடந்த 15 ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதிலுரையாற்றினார். இதைத்தொடர்ந்து இன்று சட்டசபையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

தமிழ்நாட்டில் தரமான போக்குவரத்து சேவைகளை வழங்கிட புதிய பேருந்துகளை வாங்க வேண்டிய காரணத்தால்  2024-25 நிதியாண்டில் 3000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் எனவும் நகரங்களை ஒட்டிய ஊரகப் பகுதிகளில் சிற்றுந்து சேவை திட்டம் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார்.

சென்னைக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு தெரியுமா..? மெட்ரோ.. வடசென்னை.. பூந்தமல்லி.

மேலும் ஜப்பான் வளர்ச்சி வங்கியின்  நிதியுதவியுடன் 500 மின் பேருந்துகளை கொள்முதல் செய்து இந்த நிதியாண்டில் செயல்பட்டுக்கு கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்தார். பிராட்வே பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும். குறளகம் கட்டடம் அமைந்துள்ள பகுதியில் உயர்தர நவீன வசதிகள் கொண்ட அலுவலக வளாகம் அமைக்கப்படும் என கூறினார்.

 

Leave a Comment