வயநாட்டில் நடந்த என்கவுன்டரில் 2 மாவோயிஸ்டுகள் கைது.. இருவர் தப்பியோட்டம்..!

வயநாடு-கண்ணூர் வனப்பகுதியில் கேரள காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை மற்றும் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின் போது மாவோயிஸ்டுகளுக்கும், சிறப்பு அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அனிஷ் என்ற உள்ளூர்வாசியின் வீட்டில் மாவோயிஸ்டுகள் இரவில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும், அவரது வீட்டில் இருந்து உணவு உண்டதாகவும் பாதுகாப்புப் படையினருக்கு உளவுத் தகவல் கிடைத்தது.

போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினரின் கூட்டுக் குழுவினர் நேற்று இரவு சப்பர காலனிக்கு வந்தனர். அப்போது மறைந்திருந்த மாவோயிஸ்டுகளை சரணடையுமாறு போலீசார் கூறியதை அடுத்து மாவோயிஸ்டுகளுக்கும், கேரள காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படைக்கும் இடையே நேற்று இரவு என்கவுன்டர் நடந்தது. இந்த துப்பாக்கிச் சண்டை அரை மணி நேரம் துப்பாக்கிச் சூடு நடந்ததாக அங்கு இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து நடந்த என்கவுன்டரில் இரண்டு மாவோயிஸ்டுகளை போலீசார் கைது செய்தனர். சிறிது நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் காயம் அடைந்து தப்பியோடிய மாவோயிஸ்டுகளை பிடிக்க பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இரண்டு ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் ரைபிள் துப்பாக்கியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.