“11 ஆம் வகுப்பு தேவை இல்லை” மாணவர்கள் உற்சாகம்..!!

இனிமேல் உயர்கல்வி செல்ல 11ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 

பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏராளமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு மக்களால் பாராட்டப்படும் அமைச்சராக வலம் வருபவர்தான் அமைச்சர் கே.செங்கோட்டையன்.இவர் ரேங் முறையை ஒழித்துள்ளார்.தொடர்ந்து ஏராளமான மாற்றங்களை பள்ளி கல்வித்துறையில் அடிக்கடி நிகழ்த்தி வந்தார் அமைச்சர் கே.செங்கோட்டையன்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்விதுறை அமைச்சர் கே.செங்கோட்டையன் இனிமேல் உயர்கல்வி செல்ல 12ஆம் வகுப்பு மதிப்பெண் மட்டும் போதுமானது என்றார்.அது மட்டுமில்லாமல் 11 ஆம் வகுப்பு அரசு தேர்வாக இருந்தாலும் இனிமேல் அதில் அதன் மதிப்பெண் உயர்கல்விக்கு எடுத்துக் கொள்ளப்படாது என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு 11ஆம் வகுப்பை அரசு தேர்வாக எழுதிவந்த மாணவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக மாணவர்களும் , பெற்றோர்களும் தெரிவித்து வருகின்றனர்.

DINASUVADU 

Leave a Comment