மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் – டோக்கன் விநியோகம் தொடங்கியது!

நியாயவிலை கடை பணியாளர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தேடி சென்று டோக்கன் வழங்கி வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது. அதன்படி, நியாயவிலை கடை பணியாளர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தேடி சென்று டோக்கன் வழங்கி வருகின்றனர். சென்னையில் பல்வேறு இடங்களில் நியாயவிலை கடை பணியாளர்கள் டோக்கன், விண்ணப்பம் வழங்குகின்றனர். நியாயவிலை கடைகளில் டோக்கன் குறித்த தகவல்களை அறிவிப்பு பலகை மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

குடும்ப தலைவைகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செப்டம்பர் 15-ஆம் தேதி முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ள நிலையில், அதற்கான டோக்கன், விண்ணப்பம் வழங்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. இதுபோன்று, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் விநியோகம் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் தொடங்கியுள்ளது.